ஓடும் காரில் தீ, கிராம நிர்வாக அலுவலர் உயிர் தப்பினார்


ஓடும் காரில் தீ, கிராம நிர்வாக அலுவலர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 12 Aug 2019 4:30 AM IST (Updated: 11 Aug 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஓடும் காரில் தீப்பிடித்தது. கிராம நிர்வாக அலுவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் ஜேசு ஆரோக்கியம் (வயது 38). இவர், வி.எஸ்.கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், மீன் வாங்குவதற்காக தனது வீட்டில் இருந்து வடமதுரைக்கு தனது காரில் சென்றார். காலை 6 மணியளவில் காணப்பாடியில் இருந்து வடமதுரை செல்லும் சாலையில் நந்தவனப்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜேசு ஆரோக்கியம் காரை நிறுத்திவிட்டு உடனடியாக அதில் இருந்து இறங்கி விட்டார்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கார் முழுவதும் தீ பரவி மளமளவென்று பற்றி எரிய தொடங்கியது. அருகில் வீடுகள் இல்லாததால் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. காரில் இருந்து உடனடியாக வெளியேறியதால் ஜேசு ஆரோக்கியம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காலை நேரத்தில் சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story