சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேச்சு
சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.
புதுச்சேரி,
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையமும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து மாற்றுவழி தீர்வுமுறை, கடந்தகால செயல்திறன் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்துதல் பற்றிய மாநில அளவிலான மாநாடும், தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலத்தில் வாகன விபத்து சமரச மையத்தின் தொடக்க விழாவும் புதுவை சன்வே மேனர் ஓட்டலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
இதன் நிறைவு விழா நேற்று காலை ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமாக உள்ளது. நீர், காற்றில் ஏற்பட்டுள்ள மாசு மக்களுக்கு சவாலாகவும், சிக்கலாகவும் உள்ளது. இதற்கும் நம்மால் முடிந்தவரை பணியாற்ற வேண்டும். இந்த சமரச மையத்தில் பங்கேற்று பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பகுதிகளில் இதனை பிரபலப்படுத்த வேண்டும்.
ஒரு வழக்கில் சமரசம் செய்யும் போது 2, 3 முறை தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நீண்ட காலமாக வழக்குகள் நடைபெற்று வருவதைவிட, சமரசம் ஆகி விடுவது மிகவும் சிறந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்திலேயே வழக்குகளை சமரச முறையில் தீர்வு காணும் முறை இருந்தது. அதேபோல் தற்போது சமரச முறையில் தீர்வு காண, சமரச மையங்கள், மக்கள் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைக்க உதவுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.
நீதிபதிகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. வழக்குகளின் தேக்கத்திற்கு நீதிபதிகளை குற்றஞ்சாட்ட முடியாது. இதற்கான பொறுப்பு வக்கீல்களிடமே உள்ளது. அவர்கள் துரிதமாக, நேர்மையாக, தன்னுடைய வாதிகளை அலையவிடாமல் விவாதித்து விரைவில் வழக்குகளை முடிக்க உதவ வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டின் கிளை மதுரையில் உள்ளது. புதுச்சேரி தனி மாநிலமாக உள்ளதால், இங்கும் சென்னை ஐகோர்ட்டின் கிளை அமைக்க வேண்டும். இது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. புதுச்சேரி வக்கீல்கள் மூலம் சென்னை வக்கீல்கள் வருவாய் பெறும் நிலை உள்ளது. இதனால் புதுச்சேரி வக்கீல்கள் வருவாய்பெறும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. புதுவையில் ஐகோர்ட்டு கிளை இருந்தால் இங்குள்ள வக்கீல்களும் பொருளாதார ரீதியில் நன்றாக இருப்பார்கள்.
உயர்நீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பாக மத்திய சட்ட மந்திரியிடம் மனு அளித்துள்ளேன். அவரும் நல்ல முடிவை கூறுவதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். புதுச்சேரியில் நீதித்துறைக்கு தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் புதுவை அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், வினித் கோத்தாரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் புதுவை மாவட்ட நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் புதுவை கடற்கரை சாலையில் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்டனர்.
அப்போது அங்குள்ள பழமையான கிணற்றை பார்வையிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதனை ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Related Tags :
Next Story