எட்டியதளி வீரமுனியாண்டவர் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
எட்டியதளி வீரமுனியாண்டவர் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே எட்டியதளி கிராமத்தில் வீரமுனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சந்தனகாப்பு உற்சவத்தையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரை, மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டு வண்டி பந்தயம் 5 பிரிவுகளாகவும், குதிரை வண்டி பந்தயம் 2 பிரிவுகளாகவும் கடந்த 2 தினங்களாக பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாட்டு வண்டி பிரிவில் 9 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை மாங்குடி குமார் மாட்டு வண்டியும், 2-வது பரிசை ஆர்கேசிவா மாட்டு வண்டியும், 3-வது பரிசை பொன்பேத்தி மருதபாண்டி மாட்டு வண்டியும், 4-வது பரிசை இடையாத்திமங்களம் விஜய்ராஜசேகர் மாட்டு வண்டியும் பெற்றன.
நடுமாடு மாட்டு வண்டி பிரிவில் 13 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், 2-வது பரிசை ஆர்கேசிவா மாட்டு வண்டியும், 3-வது பரிசை மஞ்சக்கரை மதி மாட்டு வண்டியும் பெற்றன.
கரிச்சான் மாட்டு வண்டி பிரிவில் 16 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை எட்டியத்தளி வீரப்பெருமாள் மாட்டு வண்டியும், 2-வது பரிசை மருதங்குடி நாகராஜன் மாட்டு வண்டியும், 3-வது பரிசை தஞ்சாவூர் மதி மாட்டு வண்டியும் பெற்றன.
தேன்சிட்டு மாட்டு வண்டி பிரிவில் 29 ஜோடிகள் கலந்து கொண்டன. பூஞ்சிட்டு மாட்டு வண்டி பிரிவில் 21 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் அனைத்து தேன்சிட்டு, பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நடு குதிரை பிரிவில் 16 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை திருகடையூர் மனேஜ்ராஜா குதிரை வண்டியும், 2-வது பரிசை திருச்சி குதிரை வண்டியும், 3-வது பரிசை கோவை குதிரை வண்டியும் பெற்றன. சிறிய குதிரை வண்டி பிரிவில் 29 குதிரைகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை அதிராம்பட்டினம் மானேகர் குதிரை வண்டியும், 2-வது பரிசை உறையூர் தேவர்வம்சம் குதிரை வண்டியும், 3-வது பரிசை அனைக்காடு லாரன்ஸ் குதிரை வண்டியும் பெற்றனர்.
பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. மேலும் பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து குதிரை, மாட்டு வண்டிகளுக்கு கமிட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தில் ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் அறந்தாங்கி பேராவூரணி சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story