அதிகாலையில் பயங்கரம் முன்னாள் மனைவியின் காதலனை குத்தி கொன்றவர் கைது
முன்னாள் மனைவியின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பைபைகுல்லா பகுதியை சேர்ந்தவர் சமியுல்லா(வயது24). இவருக்கு கோவண்டி சிவாஜிநகர் துர்கா சேவா சங் பகுதியை சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவருடன் காதல் இருந்து வந்தது. இந்தநிலையில் சமியுல்லா நேற்று அதிகாலை காதலியை சந்திக்க கோவண்டி சென்றார்.
இந்த தகவல்பெண்ணின் முன்னாள் கணவரான அப்துல் கரிம் என்பவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது நண்பர் மஜ்கார் கான்(25) மற்றும் மேலும் சிலருடன் அதிகாலை 4 மணியளவில் கோவண்டியில் உள்ள முன்னாள் மனைவியின் வீட்டுக்கு வந்தார்.
அப்போது முன்னாள் மனைவியின் வீட்டில் அவரது காதலன் சமியுல்லா இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் கரிம் தனது நண்பர்களுடன் சேர்ந்து சமியுல்லாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், படுகாயம் அடைந்த சமியுல்லா ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து அப்துல் கரிம் தனது நண்பர்களுடன் அங்கு இருந்து தப்பிஓடி விட்டார். அக்கம்பக்கத்தி னர் சமியுல்லாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சமியுல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் மலாடு மால்வாணி பகுதியில் பதுங்கி இருந்த அப்துல் கரிம் மற்றும் அவரது நண்பர் மஜ்கார் கானை கைது செய்தனர். இந்த சம்பவம் கோவண்டி பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியது.

Related Tags :
Next Story