குற்றவியல் துறையில் 3 புதிய படிப்புகள்
மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான 3 புதிய முதுநிலை டிப்ளமோ படிப்புகளை இந்த கல்வியாண்டில், அறிமுகம் செய்துள்ளது.
குருகோவிந்த சிங் இந்திரபிரஸ்தா மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய கல்வி நிறுவனங்களில் ஒன்று லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் கல்வி மையம். இந்த கல்வி நிறுவனத்தில் குற்றவியல், சைபர்கிரைம் தொடர்பாக பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தற்போது விக்டிமாலஜி அண்ட் விக்டிம் புரொடக்சன் (victimology and victim protection), செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் (security management), சைபர் கிரைம் அண்ட்லா (cybercrime and law) போன்ற முதுநிலை டிப்ளமோ படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. குற்றவியல் மற்றும் தடய அறிவியல் தொடர்பான இந்த படிப்புகள் ஓராண்டு கால அளவு கொண்டது.
புத்திக்கூர்மையும், தைரியமும் மிக்கவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்தால் அவர்களின் ஆர்வத்தை தூண்டும், சவால் நிறைந்த பணிச்சூழல் அமையும். பணியின் திறனுக்கேற்ற மதிப்பும், ஊதியமும் பெற முடியும்.
இந்த படிப்புகளை படிக்க விரும்புபவர்கள் குற்றவியல், தடய அறிவியல் சார்ந்த அறிவியல், கலை முதுநிலை படிப்புகளை படித்திருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாது காவல்துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஆர்வமுள்ள எவரும் இந்த படிப்புகளை தேர்வு செய்து படிப்பது அறிவு வளர்ச்சிக்கும், எதிர்கால வாய்ப்பு களுக்கும் உதவும்.
இது பற்றிய விவரங்களை http://www.ipu.ac.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story