திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 4:00 AM IST (Updated: 13 Aug 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கையில்் பக்தவச்சல பெருமாள் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாகும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 27-வது தலமாகவும், பெரும்புறகடல் என்றும், பக்தராவி பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 16 அடி உயரத்்்தில் நின்ற கோலத்தில் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் அருள்பாலிக்கிறார்.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை ஜேஷ்டாபிஷேகம் என்கிற பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையொட்டி காலை யாகபூஜையுடன் அபிஷேகம் தொடங்கி மாலை வரை நடந்தது. இரவு தங்க கருட வாகனத்தி்ல் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சியும்், பக்தர்கள் குழுவின் சார்பில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Next Story