பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 13 Aug 2019 4:00 AM IST (Updated: 13 Aug 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நாகூர்,

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாக திருநாள் என போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் துவா ஓதியும், இனிப்புகளை வழங்கியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அதேபோல் நாகூர் சில்லடி தர்கா கடற்கரை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நாகூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story