மாவட்ட செய்திகள்

தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது + "||" + The private placement camp takes place tomorrow

தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
தனியார் நிறுவனங்களும்- தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலை வாய்ப்பு முகாம்“ பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தனியார் நிறுவனங்களும்- தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலை வாய்ப்பு முகாம்“ பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தமாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாமானது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே, தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளவதால் இம்முகாமிற்கு 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.