மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு + "||" + Near Thekkanikottai, Raped the little girl 7-year jail for youth

தேன்கனிக்கோட்டை அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

தேன்கனிக்கோட்டை அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
தேன்கனிக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தேவருளிமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது25) என்ற வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவக்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சிவக்குமாரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை