மாவட்ட செய்திகள்

மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவக் கல்லூரி மாணவர் பலி - திண்டுக்கல் அருகே பரிதாபம் + "||" + Motorcycle crashes into a high-rise barrier wall Medical College student kill

மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவக் கல்லூரி மாணவர் பலி - திண்டுக்கல் அருகே பரிதாபம்

மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவக் கல்லூரி மாணவர் பலி - திண்டுக்கல் அருகே பரிதாபம்
திண்டுக்கல் அருகே மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாடிக்கொம்பு, 

தஞ்சையைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவருடைய மகன் அம்புரோஸ் பாலசிங் (வயது 21). இவர் நாமக்கல்லை அடுத்த குமாரபாளையத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அம்புரோஸ் பாலசிங் தனது மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலை மேம்பாலத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தில் பலியான அம்புரோஸ் பாலசிங்கின் உடலை கைப்பற்றினர்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.