மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை + "||" + Security rehearsal to prevent infiltration of militants in Kanyakumari Sea

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை
கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க “ரக்‌ஷா கிரின்“ என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் 2-வதுநாளாக தொடர்ந்து நடக்கிறது. சுதந்திரதினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியை சீர்குலைக்க கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.


இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படையும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் இணைந்து சுதந்திர தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க “ரக்‌ஷா கிரின்“ என்ற பாதுகாப்பு ஒத்திகையை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கினர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி மற்றும் போலீசார் கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையிலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையும் அதிநவீன ரோந்து படகு மூலம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோதனைச்சாவடிகளில்...

மேலும், குமரி மாவட்டத்தில் 72 கிலோமீட்டர் தூரம் உள்ள 48 கடற்கரை கிராமங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள்
சாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கும் மத்திய மந்திரி நிதின்கட்காரி வேண்டுகோள் விடுத்தார்.
2. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்: மலைக்கிராமத்திற்கு ஓட்டுப்பெட்டிகள் கழுதைகளில் கொண்டு செல்ல நடவடிக்கை
பென்னாகரம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மலைக்கிராமங்களுக்கு அரிசி மூட்டைகளை கழுதைகள் மீது ஏற்றிச்சென்று அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
3. அரசியல் குறுக்கீடு காரணமாக நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் தூர்வாரப்படாத கள்ளப்பெரம்பூர் ஏரி
அரசியல் குறுக்கீடு காரணமாக நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரப்படவில்லை என்று நீர்வள பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றம் சாட்டி உள்ளது.
4. நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடந்தது.
5. புயல், வெள்ளத்தில் இருந்து தப்புவது எப்படி? தீயணைப்பு துறையினர் ஒத்திகை
புயல் வெள்ளத்தில் இருந்து தப்புவது எப்படி? என்பது பற்றி தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தினர்.