பேரம்பாக்கம் அருகே தாய், மகளை தாக்கிய 3 பேர் கைது


பேரம்பாக்கம் அருகே தாய், மகளை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2019 4:00 AM IST (Updated: 15 Aug 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கம் அருகே தாய், மகளை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

பேரம்பாக்கம் அருகேயுள்ள நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வர்கீஸ்(47). நேற்று முன்தினம் வர்கீசின் மனைவி மற்றும் அவரது மகள் தங்கள் வீட்டில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரோஸ் (45), அவரது சகோதரர் முருகேசன்(50), ரோசின் மகன் கோகுல்(19) ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு வர்கீசின் மனைவி மற்றும் மகளை தகாத வார்த்தையால் பேசி, கையால் தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து வர்கீஸ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஸ், முருகேசன், கோகுல் ஆகியோரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story