மாவட்ட செய்திகள்

கர்நாடக அரசு சார்பில் விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்; திட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தார் + "||" + On behalf of the Government of Karnataka Per lakh of farmers 2 thousand per capita; Yeddyurappa started the project

கர்நாடக அரசு சார்பில் விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்; திட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தார்

கர்நாடக அரசு சார்பில் விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்; திட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தார்
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு சார்பில் கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு,

ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது.

அதன்படி பிரதமரின் ‘கிசான் சம்மான்’ நிதி உதவி திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரியாக கடந்த 26-ந் தேதி பதவி ஏற்ற எடியூரப்பா, பதவி ஏற்றதும் பிரதமரின் ‘கிசான் சம்மான்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் தவிர கர்நாடக அரசு சார்பில் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் அந்த தொகை 2 தவணையாக தலா ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 அதோடு கர்நாடக அரசு வழங்கும் ரூ.4 ஆயிரத்தையும் சேர்த்து கர்நாடக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என்றும் எடியூரப்பா அறிவித்து இருந்தார்.

அதன்படி இந்த திட்டத்தின் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. விழாவில் கர்நாடக விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.4,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் ‘கிசான் சம்மான்’ திட்டத்தின் கீழ் கர்நாடக விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி இந்த திட்டத்தை இன்று (நேற்று) தொடங்கி வைத்துள்ளேன்.

முதல்கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி உதவியாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. அடுத்து வரும் நாட்களில் மீதமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும். 2-வது தவணை அடுத்த மாதம் வழங்கப்படும். எங்கள் அரசு, விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் அரசு. அதனால் இந்த திட்டத்தை நான் அறிவித்தேன்.

‘பிரதமர் கிசான் சம்மான்’ திட்டத்தின் கீழ் நாட்டில் வேறு எந்த மாநிலமும் விவசாயிகளுக்கு கூடுதல் நிதி உதவியை வழங்கவில்லை. 44.93 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்திற்காக பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு இதுவரை 34.28 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி நிதிச்சுமை ஏற்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும், எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திரதின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
3. 18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
18 நாட்களாக மந்திரிகள் இல்லாததால் எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
4. கர்நாடகத்தில் மழை வெள்ள பாதிப்பு; வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் : முதல்-மந்திரி அறிவிப்பு
கர்நாடகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர் களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
5. நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும்: முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு உள்ளதாகவும், அதனால் அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், கூடிய விரைவில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித் துள்ளார்.