தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய கோரி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா


தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய கோரி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா
x
தினத்தந்தி 15 Aug 2019 4:45 AM IST (Updated: 15 Aug 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய கோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கோவை,

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கோவை அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் நேற்று சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து டீன் அலுவலகம் முன்பு தா்ணா போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு தமிழ்நாடு பயிற்சி டாக்டர்கள் சங்க நிர்வாகி முகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தால் மாணவர்களின் மருத்துவ கல்வி பாதிக்கப்படும்.

மேலும் சமூக சுகாதார வழங்குனர் என்ற புதிய முறையை அமல்படுத்தி டாக்டர்கள் அல்லாதவர்கள் 6 மாதம் இணைப்பு பயிற்சி பெற்று டாக்டராக பணியாற்றிட இந்த ஆணையம் அனுமதி அளிக்கிறது.ஆனால் 5 ஆண்டுகள் படித்த மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய நிலை உள்ளது. இது மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story