தலைவர்களை விமர்சிக்கும்போது யோசிக்கவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்


தலைவர்களை விமர்சிக்கும்போது யோசிக்கவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:15 PM GMT (Updated: 14 Aug 2019 11:09 PM GMT)

தலைவர்களை விமர்சிக்கும்போது யோசிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்தார். ப.சிதம்பரம் பூமிக்கு பாரமானவர் என்று அவர் கூறியிருந்தார். இந்த விமர்சனம் குறித்து புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்போடு பேசவேண்டும். ப.சிதம்பரம் நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மந்திரியாக இருந்தவர்.

அவர் மத்திய மந்திரியாக இருந்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு முதல்-அமைச்சர் பேசுவதுபோல் பேசவில்லை.

மற்ற தலைவர்களை விமர்சிக்கும்போது யோசனை செய்யவேண்டும். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே பிற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story