திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு


திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 7:05 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளி நடப்பு செய்தனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் ஊராட்சி தென்பாதியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஊராட்சி செயலாளர் தங்கமணி, ஊராட்சி ஒன்றிய அலுவலர் அயூப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தென்பாதி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து ம.தி.மு.க. நகர செயலாளர் கோவிசேகர் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், அ.தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி நாகூரான், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி ஜெயராமன், பாசனதாரர் சங்க செயலாளர் அந்தோணிசாமி மற்றும் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story