மாவட்ட செய்திகள்

மக்கள் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு + "||" + The Collector's talk is to get the people together and fully implement the rainwater harvesting project

மக்கள் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு

மக்கள் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.
தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த குருக்குப்பட்டி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-


சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 2019-ம் ஆண்டிற்கான ஊராட்சிகளில் ஜனவரி முதல் ஜூலை முடிய உள்ள மாதங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

மேலும், திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் அறிந்து திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கிராமநலன் கருதி கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சுய உதவிக்குழுக்கள் கூட்டமைப்பின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து நீர்வளம் பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பினை முக்கிய நோக்கமாக கொண்டு மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் ஜல்சக்தி இயக்கத்தினை பொதுமக்கள் அனைவரின் பங்கேற்போடு மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திகளை தடைசெய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், குருக்குப்பட்டி ஊராட்சி, பவளத்தானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு விலையில்லா வண்ண சீருடைகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.5,312 முதல் தவணை மானியத்தையும் மாவட்ட கலெக்டர் ராமன் வழங்கினார். மேலும், அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் கோபிநாத், வேளாண்மை இணை இயக்குனர் கமலா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. போதை பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளை மீட்டெடுக்க நடவடிக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் பேட்டி
போதை பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார்.
2. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என வணிகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
4. விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
5. அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் 8,313 அலுவலர்கள் கலெக்டர் ரத்னா தகவல்
அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 8,313 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.