சுகாதாரம், சுற்றுச்சூழல், அணிவகுப்பு - சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு


சுகாதாரம், சுற்றுச்சூழல், அணிவகுப்பு - சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 16 Aug 2019 4:15 AM IST (Updated: 16 Aug 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டி சுதந்திர தினவிழாவில் ரொக்கப் பரிசு, விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி,

புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் ஜனாதிபதியின் விருதினை பெற்றனர். சிக்மா பிரிவு ஏட்டு ஜெயப்பிரகாஷ் முதல்-அமைச்சரின் காவல் பதக்கத்தினை பெற்றார்.

சிறந்த பணிக்கான ராஜீவ்காந்தி காவல் பதக்கத்தினை இன்ஸ்பெக்டர்கள் பாலசந்திரன், பத்மநாதன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, பாஸ்கர்தாஸ், முருகையன், கணேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகேஸ்வரராவ், சங்கர், ஏட்டுகள் பிரசாத், துர்கா பவானி, ஜெயமுருகன், தியகாராஜன், போலீசார் விஜய், தமிழ்ச்செல்வி, ரகுநாதன், சிங்காரவேலு, கடலி மதுசூதன ராவ், செல்வம், பழனிவேல் ஆகியோர் பெற்றனர்.

சிறந்த காவல் நிலையமாக டி.ஆர்.பட்டினம் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதை சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் பெற்றுக்கொண்டார். தேசிய அளவில் சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்யப்பட்ட நெட்டப்பாக்கம் காவல்நிலைய போலீசாருக்கு ரொக்கப் பரிசும், தாய், மகளான கலைவாணி, கிருஷ்ணவேணி கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்த முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசிய மாணவர் படையின் முதுநிலை பிரிவில் முதல்-அமைச்சரின் தங்கப்பதக்கத்தினை கணேஷ்குமார், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கத்தை முத்துக்குமரன், இளநிலை பிரிவில் முதல்-அமைச்சரின் தங்கப்பதக்கத்தினை பூஜாஸ்ரீ, கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கத்தினை முகுந்தா, கல்வி செயலாளரின் வெண்கல பதக்கத்தினை சதீஷ் காயக் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

டாக்டர் அம்பேத்கர் நினைவுப் பரிசு அமலோற்பவம் பள்ளி மாணவன் கிஷோர், திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிநேகப்பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நீர் நிலைகளை பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு செய்த பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜுக்கு முதல்-அமைச்சரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுவை சுற்றுச்சூழல் மற்றும் சதுப்புநிலக்காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்க தலைவர் செல்வமணிகண்டனுக்கு சுற்றுச்சூழல் விருதும், ஈட்டன் பவர் குவாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு பசுமை விருதும் வழங்கப்பட்டது.

சுகாதார பணியினை சிறப்பாக செய்த மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் நளினி, ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீதா, முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி டாக்டர் தாரணி, பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமாசங்கர், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய பெண் சுகாதார மேற்பார்வையாளர் வேலு வீரமுனீஸ்வரி,

முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய கண் பரிசோதனை தொழில்நுட்ப வல்லுனர் மோகன்தாஸ், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலிய அதிகாரி கன்னிகா, இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மைய செவிலிய அதிகாரி அனுராதா, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மைய மருந்தாளுனர் இந்துமதி, மண்ணாடிப்பட்டு சமுதாய நல வழி மைய ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் விஜயபாஸ்கரன், பைலேரியா உதவி இயக்குனர் ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் லில்லி மேரி கரோலின்,

வில்லியனூர் ஆரம்ப சுகதார நிலைய சுகாதார ஆய்வாளர் பாபு ஜெயகாந்தன், முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய துணை செவிலியர் நட்சத்திரம், கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய துணை செவிலியர் தனலட்சுமி, அரசு சுவாச நோய் மருத்துவமனை காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் பீனா, கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார உதவியாளர் அய்யனார், முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய கள ஆய்வாளர் வெங்கடேசன், பைலேரியா உதவி இயக்குனர் அலுவலக பூச்சி சேகரிப்பாளர் மணிவண்ணன்,

முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய களப்பணியாளர் கிருஷ்ணராஜ், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நர்சிங் ஆர்டலி பக்தவச்சலம், இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மைய வார்டு உதவியாளர் சிவசங்கரன், அரசு சுவாசநோய் மருத்துவமனை துப்புரவு பணியாளர் குணசேகரன் ஆகியோருக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பான அணி வகுப்பு நடத்தியதாக காவல் பிரிவில் ஐ.ஆர்.பி. போலீசாரும், காவல்படை அல்லாதோர் பிரிவில் ஊர்க்காவல் படையினரும் (பெண்), என்.சி.சி. சீனியர் ஆண்கள் பிரிவில் விமானப்படையினரும், பெண்கள் பிரிவில் தரைப்படையினரும் பரிசுகள் பெற்றனர். என்.சி.சி. ஜூனியர் பிரிவில் பெண்கள் தரைப்படையினரும், சிறப்பு பிரிவில் என்.எஸ்.எஸ். மகளிரும், அரசு ஆண்கள் பள்ளியில் ஜீவானந்தம் பள்ளியும், பெண்கள் பள்ளியில் சுசீலாபாய் பள்ளியும், தனியார் பள்ளியில் கே.எஸ்.பி. பள்ளியும், பெண்கள் பிரிவில் குளூனி பள்ளியும், கலைநிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பண்டிட் துரைசாமி பள்ளியும், தனியார் பள்ளியில் பிரசிடென்சி பள்ளியும் பரிசு பெற்றன.

Next Story