மாவட்ட செய்திகள்

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது + "||" + Intimidate with a knife To the jeweler owner Man arrested for trying to extort money

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைக் கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியில் ரமேஷ் ஜலோரா என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை 6 மணியளவில் ரமேஷ் ஜலோரா மட்டும் கடையில் தனியாக இருந்தார். இதை நோட்ட மிட்ட மர்ம ஆசாமி ஒருவர் முகமூடி அணிந்துகொண்டு அந்த கடைக்குள் புகுந்தார்.


இதையடுத்து அந்த ஆசாமி கத்தியை எடுத்து ரமேஷ் ஜலோராவின் கழுத்தில் வைத்து ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டினார். பணம் தர வில்லையென்றால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடு வேன் என மிரட்டினார்.

இதையடுத்து கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை எடுப்பது போல நடித்த ரமேஷ் ஜலோரா திடீரென கத்தியை காட்டி மிரட்டியவரை மடக்கி பிடித்தார். இதில், அந்த ஆசாமி கடையை விட்டு ஓட முயன்றபோது உதவிகேட்டு சத்தம் போட்டார்.

உடனடியாக அந்த பகுதியில் நின்றவர்கள் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பெயர் சுப்ரமணி ஹரிஜன்(வயது40) என்பதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.