சூனாம்பேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
சூனாம்பேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 37). விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்தார். மேலும் இவர் சூனாம்பேடு அடுத்த வில்லிவாக்கத்திலுள்ள தனியார் உப்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் சூனாம்பேடு அருகே தாங்கல் என்ற இடத்தில் குளம் அருகே உள்ள வயல்வெளியில் கால்கள் இரண்டும் வெட்டப்பட்டு தலை பகுதி முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் வேலு சூனாம்பேடு காலனி பகுதியில் உள்ள பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் மேலும் முக்கிய குற்றவாளியான பிரேம் என்பவரின் தங்கையுடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனால் பிரேம், வேலுவை கொலை செய்ய முடிவு செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று சூனாம்பேடு போலீசார் காலனி பகுதியை சேர்ந்த சுரேந்தர் (21), ஜெயசூர்யா (21), சூர்யா (21), சரவம்பாக்கத்தை சேர்ந்த ராம் என்ற ராமசந்திரன் (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சூனாம்பேடை சேர்ந்த பிரேம், நுகும்பல் கிராமத்தை சேர்ந்த சங்கிலி என்ற விஜயதாசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story