மழைநீர் சேமிப்பு அனைவருக்கும் அவசியம்; கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆனந்த் பேச்சு


மழைநீர் சேமிப்பு அனைவருக்கும் அவசியம்; கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆனந்த் பேச்சு
x
தினத்தந்தி 17 Aug 2019 3:45 AM IST (Updated: 17 Aug 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேமிப்பு அனைவருக்கும் அவசியம் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஆனந்த் பேசினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திரத்தினத்தையொட்டி 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி திருவாரூர் வட்டம் கீழகாவாதுகுடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கலந்து கொண்டு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பாரத பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான காப்பீடு அட்டை மற்றும் மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைநீர் சேமிப்பு அனைவருக்கும் அவசியம். நீரை பாதுகாக்க வேண்டும். நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த பழகி கொள்ள வேண்டும்.

அதேபோன்று நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீர் மேலாண்மை தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை சேகரிக்கும் தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story