முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது எப்போது? கலெக்டர் ராஜசேகர் பதில்
முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது என்பதற்கு கலெக்டர் ராஜசேகர் பதிலளித்தார்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
குடிமராமத்து பணியில் அரசியல் குறுக்கீடு இருக்கிறது. விவசாயிகள் அல்லாதோர் சங்கத்தை தொடங்கி, குடிமராமத்து பணியினை மேற்கொள்கின்றனர். இதேபோல் ஆக்கிரமிப்புகளும் முழு அளவில் அகற்றப்படவில்லை. முல்லை பெரியாறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருக்கிறது. இருப்பினும் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காமல் உள்ளனர். உடனே தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது திறக்கப்படும் என்பதனை உடனே அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு புகார்களை கூறுகின்றோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் இந்த கூட்டத்தில் தாசில்தார்கள் கலந்துகொள்வதில்லை. முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வரும் நீர் அதிக அளவில் திருடப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் ராஜசேகர் பேசியதாவது:-
குடிமராமத்து பணிகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கண்மாய் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. குடிமராமத்து பணிகள் குறித்து முழு விவரத்தையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கண்மாய் முன்பு நோட்டீஸ் பலகை வைக்க வேண்டும். அதில் கண்மாயின் மொத்த பரப்பளவு, செய்யப்படும் பணிகள் உள்பட அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து அரசிற்கு தகவல் அனுப்பி உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பெரியாறு-வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசும்போது, முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 90 கி.மீ. பயணம் செய்து 36 மணி நேரத்திற்கு பிறகு தான் வைகை அணைக்கு வருகிறது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரையும், வைகை அணை பெறும் நீரையும் ஒப்பிட்டு பார்த்து, பெரியாறு அணையில் இருந்து திறந்து விடும் நீர் அளவை விட வைகை அணைக்கு குறைவான நீர் தான் வருகிறது என கணக்கீடு மிகவும் தவறானது. கோடை காலத்தில் நீர் அதிக அளவில் ஆவியாகிறது. இதுவும் ஒருவித காரணம் ஆகும். தண்ணீர் திருடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.

Related Tags :
Next Story