சுதந்திர தின விழா உரையில் மக்கள் தொகை பிரச்சினை குறித்த மோடி கருத்துக்கு-சிவசேனா வரவேற்பு


சுதந்திர தின விழா உரையில் மக்கள் தொகை பிரச்சினை குறித்த மோடி கருத்துக்கு-சிவசேனா வரவேற்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 5:42 AM IST (Updated: 17 Aug 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகை பிரச்சினை குறித்த மோடி கருத்துக்கு சிவசேனா வரவேற்பு தெரிவித்து உள்ளது.

மும்பை,

சுதந்திர தின விழா உரையின்போது, பிரதமர் மோடி மக்கள் தொகை பிரச்சினை பற்றிய கவலையை வெளிப் படுத்தினார். அப்போது மக்கள் தொகை பெருக்கம் பல தொல்லைகளை உருவாக்குகிறது என்றார். குடும்பத்தை சிறிதாக வைத்து கொள்வது நாட்டுப்பற்றுக்கு அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.

இதனை பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா வரவேற்று உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மக்கள் தொகை பிரச்சினை பற்றி சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று எங்களது மறைந்த தலைவர் பால்தாக்கரே எப்போதும் வலியுறுத்தி வந்தார். இந்தநிலையில் சிவசேனாவின் கொள்கையை மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆமோதித்து உள்ளது. இது நாட்டு நலனுக்கானது. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தது பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கு படிக்கட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உடன் இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகளில் மதத்தை கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

Next Story