காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை - அம்மா திட்ட முகாம்


காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை - அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 18 Aug 2019 3:45 AM IST (Updated: 18 Aug 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

படப்பையை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன் தலைமை தாங்கினார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன் தலைமை தாங்கினார். முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், ஜாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 44 மனுக்களை பொது மக்களிடம் இருந்து மண்டல துணை வட்டாட்சியர் பெற்று கொண்டார்.

இதில் 3 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வனக்குழு தலைவர் என்.டி.சுபாஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஹேமாமாலினி, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story