ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 6:52 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நந்திமங்கலம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்வதற்கு ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் மெயின் ரோட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரிந்து செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் இந்த சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காட்சியளிப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த சாலையில் சுமார் 10 மீட்டர் நீளத்துக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சீரமைக்கப்படாத சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story