தாராபுரத்தில் ருசிகர சம்பவம்: ஒரு போண்டா தகராறு போலீஸ் நிலையம் வரை சென்றது, டீக்கடைக்காரரை எச்சரித்து அனுப்பிய போலீசார்
தாராபுரத்தில் ஒரு போண்டா தகராறு போலீஸ் நிலையம் வரை சென்றது. டீக்கடைக்காரரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் முன்பெல்லாம் பொதுமக்கள் மத்தியில் வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறு என்றுதான் அடிக்கடி சண்டை வரும். பிறகு அந்த பிரச்சனை போலீஸ் நிலையம் வரை சென்றுவிடும். அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தி, இருதரப்பினரையும் சமாதானப்படுத்துவார்கள் அல்லது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டுக்கு அலையவிடுவார்கள்.
இதுதான் நடக்கும். ஆனால் இப்போது எதற்கெல்லாம் தகராறு நடக்கிறது ? ஏன் நடக்கிறது ? என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலை தான் உள்ளது. அந்த வகையில் ஒரு போண்டாக்காக நடந்த தகராறு போலீஸ் நிலையம் வரை சென்று இருக்கிறது. அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தாராபுரம் புறவழிச்சாலையில் பிரபலமான டீக்கடை ஒன்று உள்ளது. நேற்று வானம் மேகமூட்டமாக இருந்ததால், அந்த பகுதியில் இதமான குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால் டீக்கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டமும் கூடுதலாக இருந்துள்ளது. அப்போது அந்த டீக்கடைக்கு 50 வயது மதிக்கத்தக்க வாடிக்கையாளர் ஒருவர் டீ குடிக்க சென்றார். அப்போது கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்களில் சிலர், சூடாக போண்டா சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்ததும் அந்த வாடிக்கையாளருக்கு, சூடாக போண்டா சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அப்போது கடையில் இருந்த ஊழியர் ஒருவர், வாணலியில் போண்டா தயார் செய்து கொண்டிருந்தார். வாடிக்கையாளர் கல்லா அருகே நின்று கொண்டிருந்த நபரிடம் சென்று, சூடாக ஒரு போண்டா தருமாறு கேட்டு இருக்கிறார். உடனே அந்த நபர் ஒரு போண்டாவை எடுத்து, ஒரு துண்டு காகிதத்தில் வைத்து கொடுத்துள்ளார்.
அந்த போண்டாவை வாங்கிய வாடிக்கையாளருக்கு அது ஆறிப்போனதால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஏற்பட்டது. ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, ஒரு உணவு விடுதிக்கு சென்று, அங்கிருந்த ஊழியரிடம் ஊத்தாப்பம் எப்படி சுடவேண்டும் என்று வரிசையாக வர்ணனையோடு சொல்வார். முழுவதும் கேட்டுவிட்டு, அந்த ஊழியர் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று சத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவார். அதைக்கேட்டு நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைவார்.அதைப்போல போண்டாவை கையில் வாங்கிய வாடிக்கையாளர் “என்னப்பா.., போண்டா சூடாவே இல்லை ?’ என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு கடைக்காரர் நீங்கள் வரும்போதெல்லாம், போண்டா சுட்டா தரமுடியும் என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார். இதனால் கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடைக்காரர் வாடிக்கையாளரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே அருகே இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, வாடிக்கையாளரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாடிக்கையாளருக்கு, டீக்கடையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்துபோனதால் அவரால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. டீக்கடையில் இருந்த அனைவருக்கும் சூடாக போண்டா கொடுத்துவிட்டு தனக்கு மட்டும் ஆறிப்போன போண்டாவை கொடுத்ததோடு, தட்டிக்கேட்டதற்காக தன்னை தரக்குறைவாக பேசியதை நினைத்து அவர் வேதனைப்பட்டார்.
உடனே நேராக அவர் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சூடாக போண்டா கேட்டு தராத, டீக்கடைக்காரர் மீது புகார் கொடுத்தார். போலீசார் டீக்கடைக்காரரை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். ஒரு போண்டா பிரச்சினையை இந்த அளவிற்கு பெரிதாக்கி விட்டீர்களே என்று வருத்தப்பட்டதோடு. வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி, டீக்கடைக்காரரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தாராபுரம் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story