துடியலூர் போலீஸ் நிலையத்தில் மகளுடன் தாய் தர்ணா போராட்டம்


துடியலூர் போலீஸ் நிலையத்தில் மகளுடன் தாய் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2019 5:00 AM IST (Updated: 18 Aug 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

துடியலூர் போலீஸ் நிலையத்தில் மகளுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

துடியலூர்,

கோவை கவுண்டம்பாளையம் பி அண்டு டி காலனி பாபாநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவடிவு (வயது 30). இவருடைய கணவர் சுனில்குமார் இறந்து விட்டார். இவர்களுக்கு 4 வயதில் ஜெயதுர்கா என்ற மகள் உள்ளார். சண்முகவடிவு தனது வீட்டின் அருகே கடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை சண்முகவடிவு வீடு மற்றும் கடையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். போலீசார் இதுகுறித்து விசாரிப்பதாக கூறினர்.

இந்தநிலையில் சண்முகவடிவு தனது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தனது மகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து துடியலூர் போலீசார் கூறுகையில், இவர் ஏற்கனவே அவருடைய சகோதரர்கள், சகோதரி மற்றும் தாயார் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.இது குடும்ப சொத்து பிரச்சினை என்பதால் கோர்ட்டுக்கு சென்று தீர்வு காணுங்கள் என அறிவுறுத்தி உள்ளோம். ஆனாலும் அதனை ஏற்காமல் அந்த இடத்தை விட்டு நகராமல் புகாரை ஏற்க வேண்டும் என்று கூறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார் என்றனர். இந்த சம்பவம் காரணமாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story