தி.மு.க. கூட்டணியை மக்கள் விரும்பவில்லை - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
தி.மு.க. கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசி,
சிவகாசி அருகேயுள்ள எரிச்சந்தம் கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவஞானம், சாத்தூர் ராஜவர்மன் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிக்குமார், சுப்பிரமணியன் சிவகாசி ஒன்றிய முன்னாள் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-
அச்சன்கோவில்-பம்பையாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார். விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத சூழ்நிலை தற்போது உள்ளது. இதற்கு காரணம் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நமது மாவட்டத்துக்கு தேவையான குடிநீர் கிடைத்து வருகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் செல்வது அவரது சொந்த பணிக்காக அல்ல. சுகாதாரத்துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், அங்குள்ள தொழிலதிபர்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைக்கவே முதல்-அமைச்சர் செல்கிறார். வெளிநாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வருகை தருவதன் மூலம் நமது மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்புள்ளது. முதல்-அமைச்சரின் இந்த பணியை பாராட்டாமல் கூட ஸ்டாலின் இருந்து இருக்கலாம். ஆனால் எதிர்மறை கருத்தை தான் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
நீர்வரத்து கால்வாய் பகுதியில் குடியிருப்புகள் இருந்தால் அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருந்தால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினிகாந்த் போல் நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அ.தி.மு.க. அதை ஏற்றுக்கொள்ளும். தி.மு.க. கூட்டணியை மக்கள் விரும்ப வில்லை. அதனால் தான் அவர்கள் வேலூர் தேர்தலில் குறைந்த ஓட்டில் வெற்றி பெற்றனர்.
இனி வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் கூட சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். கமல்ஹாசன் கட்சிக்கு கொள்கை கிடையாது. தமிழகத்தில் பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அவர் எந்த பகுதியையும் பார்வையிட வரவில்லை. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறார். தமிழக மக்களை அ.தி.மு.க. தான் காப்பாற்றும். எதிர்கட்சியாக எப்போதும் தி.மு.க. தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story