மணல் திருட்டு வாகனங்களை விடுவிக்க சிறப்பு கோர்ட்டுக்கே அதிகாரம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மணல் திருட்டு வாகனங்களை விடுவிக்க சிறப்பு கோர்ட்டுக்கே அதிகாரம் உள்ளது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த மணிகண்டன் என்ற மணிவண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மானாமதுரை வைகை ஆற்றில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளியதாக என்னுடைய மாட்டுவண்டியை கிராம நிர்வாக அலுவலர் பறிமுதல் செய்தார். இதனால் எனது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே மாட்டுவண்டியை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், “மணல் திருட்டு சம்பந்தமான வழக்கில் ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் ஏற்கனவே அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அதில், மணல் திருட்டை தடுக்க மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் சிறப்பு செயலாக்க குழுவை அமைத்து, அவ்வப்போது குழு கூட்டத்தை நடத்தி கண்காணிக்க வேண்டும். தவறுக்கு உடந்தையாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மற்றும் கனிமவளத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பான வழக்குகளையும், வாகனங்களை விடுவிப்பது குறித்து சிறப்பு கோர்ட்டுகளே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி, மணல் திருட்டு சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை அமைத்து தமிழக உள்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே மணல் திருட்டு சம்பந்தமான வாகனங்களை விடுவிப்பது குறித்து இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டுகளே முடிவு செய்யும் என்பதால், இந்த கோர்ட்டினால் எந்த நிவாரணமும் தர முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சிறப்பு கோர்ட்டை நாடலாம்“ என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story