சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய சாரல் மழை: 467 மி.மீட்டர் பதிவு
சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. 467 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. மாநகரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டியது. அஸ்தம்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, கிச்சிப்பாளையம், நெத்திமேடு, அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியுற்றனர்.
தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழையின் போது பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காலையிலும் நீடித்தது. மாநகரில் பெரும்பாலான பள்ளிகள் நேற்று இயங்கின. இந்த மழையினால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்றனர். சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பயிற்சி பெற வந்த வீரர்களும், நடைபயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 467.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக ஆணைமடுவு பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-53.2, ஏற்காடு-43.4, காடையாம்பட்டி-38, ஆத்தூர்-31.4, பெத்தநாயக்கன்பாளையம்-31, கரியகோவில்-30, தம்மம்பட்டி-30.2, வீரகனூர்-29, கெங்கவல்லி-27.4, வாழப்பாடி-25.4, எடப்பாடி-24, சங்ககிரி-17.4, ஓமலூர்-18, மேட்டூர்-3.2.

Related Tags :
Next Story