மூங்கில்துறைப்பட்டு அருகே, பிரபல ரவுடி ,விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை


மூங்கில்துறைப்பட்டு அருகே, பிரபல ரவுடி ,விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே பிரபல ரவுடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே புரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சொத்தை பிரித்து தருமாறு நாகராஜ் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சிறிது காலம் கழித்து சொத்தை பிரித்து தருவதாக கூறியுள்ளார். இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாகராஜ் சம்பவத்தன்று விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நாகராஜ் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story