தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 19-7-2019 அன்று குட்டி என்ற நரசிம்மன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி குரூஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரொசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் என்ற டைட்டஸ் (வயது 22), மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய அந்தோணி சகிலன் என்ற சகிலன் (22) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, குண்டர் சட்டத்தின் கீழ் டைட்டஸ், சகிலன் ஆகியோரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பாளையங்கோட்டை ஜெயிலில் அதிகாரிகளிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story