மாவட்ட செய்திகள்

சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்: உடலை குழிதோண்டி புதைத்த கணவர் - மைத்துனர் கைது + "||" + The husband who buried the body Brother-in-law arrested

சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்: உடலை குழிதோண்டி புதைத்த கணவர் - மைத்துனர் கைது

சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்: உடலை குழிதோண்டி புதைத்த கணவர் - மைத்துனர் கைது
காணாமல் போய் விட்டதாக போலீசில் புகார் கொடுத்துவிட்டு, பெண்ணை கொன்று நாடகமாடிய கணவரும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,

பெங்களூரு கொத்தனூர் அருகே துர்கா பரமேஸ்வரி லே-அவுட்டில் வசித்து வருபவர் கல்லேஷ். இவரது மனைவி ஷில்பா(வயது 21). இந்த தம்பதிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. கணவன், மனைவியின் சொந்த ஊர் பல்லாரி மாவட்டம் ஆகும். திருமணத்திற்கு பின்பு அவர்கள் துர்கா பரமேஸ்வரி லே-அவுட்டில் வாடகை வீட்டில் வசித்தனர். ஆன்லைனில் உணவு பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் ஊழியராக கல்லேஷ் வேலை பார்த்து வந்தார். ஷில்பாவும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தார்.


இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி வேலைக்கு சென்ற ஷில்பா வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்றும், தனது மனைவி காணாமல் போய் விட்டதாகவும் கூறி கொத்தனூர் போலீஸ் நிலையத்தில் கல்லேஷ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷில்பாவை தேடிவந்தனர். இதற்கிடையில், ஷில்பா காணாமல் போக வாய்ப்பில்லை என்றும், அவரை கல்லேஷ் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கொத்தனூர் போலீசில் ஷில்பாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து, கல்லேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் கல்லேசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனது மனைவி காணாமல் போகவில்லை என்றும், அவரை கொலை செய்ததுடன், அவருடைய உடலை தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் கல்லேஷ் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, கல்லேஷ், அவரது அண்ணன் கிருஷ்ணப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கல்லேசுக்கும், ஷில்பாவுக்கும் திருமணம் நடந்த பின்பு குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், தொழிற்சாலை ஒன்றுக்கு ஷில்பா வேலைக்கு சென்றுள்ளார். இது கல்லேசுக்கு பிடிக்கவில்லை. மேலும் சம்பளத்தையும் கல்லேசுடன் கொடுக்காமல் ஷில்பா இருந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 11-ந் தேதி இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த கல்லேஷ், தலையணையை எடுத்து ஷில்பாவின் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் சகோதரர் கிருஷ்ணப்பாவுடன் சேர்ந்து ஷில்பாவின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கொத்தனூரில் உள்ள காலி இடத்தில் குழி தோண்டி கல்லேஷ் புதைத்துள்ளார். அதன்பிறகு, ஷில்பா காணாமல் போய் விட்டதாக, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததுடன், போலீசிலும் அவர் காணாமல் போய் விட்டதாக கூறி பொய் புகார் கொடுத்து கல்லேஷ் நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. கைதான கல்லேஷ், கிருஷ்ணப்பா மீது கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் நாகை அருகே நடந்தது
நாகை அருகே தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.