மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்
மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பலருக்கும் இதில் வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்று எஸ்.எஸ்.சி. இந்த அமைப்பு பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களையும் தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. தற்போது 7-ம் நிலைத் தேர்வின் அடிப்படையில் 1350 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், மெக்கானிக், சீனியர் கன்சர்வேசன் அசிஸ்டன்ட், லேடி மெடிக்கல் அட்டன்ட் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி
10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்குத் தேவையான கல்வித்தகுதியை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வருகிற 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story