சுள்ளான் ஆற்றை ரூ.24 லட்சத்தில் தூர்வாரும் பணி அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு


சுள்ளான் ஆற்றை ரூ.24 லட்சத்தில் தூர்வாரும் பணி அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

சுள்ளான் ஆற்றை ரூ.24 லட்சத்தில் தூர்வாரும் பணியை அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு செய்தார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம் மூலம் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகி றது. அதன்படி பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் உள்ள சுள்ளான் ஆறு 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பொறியாளர்கள்

ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் இந்திராமணி, ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் சூரியநாராயணன், கோபிநாதன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story