மீன்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி ராமேசுவரத்தில் படகுகள் கடலுக்கு செல்லவில்லை; அமைச்சரிடம், மீனவர்கள் மனு கொடுக்க முடிவு
சூடை, காரல் மீன்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர்கள் மனு கொடுக்க முடிவுசெய்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. மீன்பிடி தொழிலை நம்பி ராமேசுவரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளதுடன் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் பிடித்து வரும் சூடை, காரல் மீன்கள் மீதான ஜி.எஸ்.டி. விரி விதிப்பால் ராமேசுவரத்தில் நேற்று ஏராளமான மீன் பிடி விசைப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரத்தில் வெறும் 222 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றதுடன் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரம் உள்ள கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது:-
மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலைகளில் பல வகை மீன்கள் கிடைக்கும். மீனவர்கள் பிடித்து வரும் சூடை, காரல் மீன்கள் வியாபாரிகள் மூலம் வாங்கப்பட்டு ஐஸ் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு வாகனம் மூலம் தூத்துக்குடி மற்றும் கூடங்குளத்தில் உள்ள மீன் கம்பெனிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பும் மீன்களை மிஷினில் போட்டு அரைத்து ஆயில் தனியாகவும், பவுடர் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவரை இந்த மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆயிலுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது மீனில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பவுடருக்கும் தனியாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்களை வாங்கும் கம்பெனியினர் சூடை, காரல் மீன்களை வாங்க மறுத்து வருவதுடன் பல கம்பெனிகளை மூடி விட்டனர். இது வரையிலும் சூடை, காரல் மீன்களை வியாபாரிகள் 1 கிலோ ரூ.12-க்கு வாங்கி வந்த நிலையில் தற்போது வெறும் ரூ.5-க்கு மட்டுமே வாங்குகின்றனர்.
ஒரு முறை கடலுக்கு சென்று வர மட்டும் ஒரு படகிற்கு டீசல் செலவு, மீனவர்களுக்கு கூலி, ஐஸ்கட்டி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்தால் 60 ஆயிரம் வரை செலவாகும். இந்த நிலையில் சூடை, காரல் மீன்களை குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்டால் மீன் பிடிக்கச் சென்று வந்தும் அதிகமான நஷ்டம் தான் ஒவ்வொரு படகிற்கும் ஏற்படும். சூடை,காரல் மீன்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவதிப்பை ரத்து செய்யக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீன் உலர் வியாபாரிகளும் சேர்ந்து நாளை (புதன்கிழமை) சென்னையில் தமிழக மீன் வளத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். மீன்கள் மீதான ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்யும் வரை ராமேசுவரத்தில் உள்ள பெரும்பாலான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story