கண்ணமங்கலம் அருகே, பள்ளிக்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு - மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்


கண்ணமங்கலம் அருகே, பள்ளிக்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு - மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Aug 2019 3:45 AM IST (Updated: 20 Aug 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே பள்ளக்கொள்ளையில் பள்ளிக்கு செல் லும் சாலை ஆக்கிரமிக்கப்பட் டதால் மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள பள்ளக்கொள்ளை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங் கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்தை வருவாய்த்துறை சார்பில் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டது. இதையடுத்து பள்ளி செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பள்ளக்கொள்ளை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story