பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெட்டர் அலுவலகத்தில் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 295 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை சார்பில் விபத்தில் மரணம் அடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், இயற்கை மரணம் அடைந்த 15 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்து 11 ஆயிரமும், திருமண உதவித் தொகையாக 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரமும், ஓய்வூதிய உதவித் தொகை ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 59 பேருக்கு ரூ.59 ஆயிரமும் என மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள காசோலைகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 36 மதிப்புள்ள நல உதவிகளை கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, தனி துணை கலெக்டர் (சமூக பாகாப்பு திட்டம்) குணசேகரன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story