ஓசூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பிறந்த நாள் விழா
ஓசுரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓசூர்-ராயக்கோட்டை சர்க்கிளில் உள்ள ராகவேந்திரர் கோவில் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் எச்.எம்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாயவன், இளையராஜா, ராஜகோபால், சூரியவளவன், காளிதாஸ், நாகராஜ், பத்மாவதி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story