செங்கத்தில் கோவில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை; தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கோவில் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் சிலர் செங்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செங்கம்,
செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் சிலர் செங்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் மண்எண்ணெய் கேனுடன் வந்த சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தாசில்தார் ஏ.எஸ்.பார்த்தசாரதி தாழையூத்து கிராம மக்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி இன்னும் சில நாட்களில் கோவில் நிலம் தொடர்பான பிரச்சினைக்கு நேரில் வந்து நிலத்தை அளந்து கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கோவில் நிலம் மீட்டுத் தரப்படும் என உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story