நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தேர்தல்: தச்சை கணேசராஜா உள்பட 21 பேர் போட்டியின்றி தேர்வு


நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தேர்தல்: தச்சை கணேசராஜா உள்பட 21 பேர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 20 Aug 2019 3:00 AM IST (Updated: 20 Aug 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தேர்தலில் தச்சை கணேசராஜா உள்பட 21 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழுவிற்கு 21 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக வேட்பு மனு தாக்கல் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்து வந்தது.

நேற்று அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, சத்தியானந்த் சீனிவாசகம், ஆறுமுகம், சண்முகசுந்தரம், ராமகிருஷ்ணன், ஜெரால்டு, காளியப்பன், சிவசுப்பிரமணியன், கனகராஜ், வைத்திலிங்கம், சுரேஷ்குமார், ஆறுமுகம், லட்சுமி, பெருமாள், அய்யாத்துரை, வெங்கடேசன், செல்லம்மாள், அம்பிகா, பால அங்கம்மாள், கிரேஸ் இம்மாக்குலேட், லதா ஆகிய 21 பேர் தேர்தல் அதிகாரியான துணை பதிவாளர் ராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனு தாக்கலின் போது அமைச்சர் ராஜலட்சுமி, விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், செல்வமோகன்தாஸ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணைமேயர் ஜெகநாதன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், இளைஞர் அணி செயலாளர் ஹரிகரசிவசங்கர், ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வேட்பு மனு மீது பரிசீலனை மாலையில் நடந்தது. இவர்கள் 21 பேர் தவிர மற்ற யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தச்சை கணேசராஜா உள்பட 21 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட விவரத்தை தேர்தல் அதிகாரி ராஜன் நோட்டீஸ் போர்டில் ஒட்டினார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

Next Story