நெல்லையில் மூப்பனார் உருவப்படத்துக்கு காங்கிரஸ்- த.மா.கா.வினர் மாலை அணிவிப்பு


நெல்லையில் மூப்பனார் உருவப்படத்துக்கு காங்கிரஸ்- த.மா.கா.வினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 3:15 AM IST (Updated: 20 Aug 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி நெல்லையில் அவருடைய உருவப்படத்துக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜி.கே.மூப்பனார், சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்தி ஆகியோர் உருவப்படத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, கிழக்கு மாவட்ட சக்தி ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லையில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மூப்பனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை பேட்டையில் வார்டு தலைவர் தென்னம்பாண்டி தலைமையில் மாநகராட்சி முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுடலைக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு வேட்டி, சட்டை வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Next Story