காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்
பெங்களூருவில் குளியலறையில் ஜவுளி வியாபாரி கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கத்தியால் குத்தி கொன்று உடலை எரித்ததாக 15 வயது மகள், அவருடைய காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக், 17-வது கிராசில் வசித்து வந்தவர் ஜெயக்குமார் என்ற திலீப் (வயது 41). இவருடைய மனைவி பூஜாதேவி. இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயக்குமார் ஜவுளி வியாபாரி ஆவார். கடந்த 17-ந் தேதி ஜெயக்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகனுடன் புதுச்சேரிக்கு சென்றார். இதனால் வீட்டில் ஜெயக்குமாரும், அவருடைய மகள் மட்டும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜெயக்குமாரின் வீட்டு குளியல் அறையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குளியல் அறையில் பிடித்த தீயை அணைத்தனர். அங்கு ஜெயக்குமார் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ராஜாஜிநகர் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அவருடைய படுக்கை அறையில் ரத்த கறை இருந்தது. இதை வைத்து ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு, அவருடைய உடல் எரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே ஜெயக்குமாரின் மகளை பிடித்து போலீசார் விசாரிக்க முயன்றனர்.
அப்போது அவருடைய காலில் தீக்காயம் இருப்பதும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. உடனடியாக ஜெயக்குமாரின் மகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜெயக்குமாரை தனது காதலன் பிரவீன் (18) என்பவருடன் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமாரின் மகளையும், அவருடைய காதலன் பிரவீனையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
ஜெயக்குமாரின் மகளும், ராஜாஜிநகர் 20-வது மெயின் ரோட்டில் வசித்து வரும் பி.யூ.சி. முதலாம் ஆண்டு மாணவருமான பிரவீனும் ஒரே பள்ளியில் படித்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் காதலித்தனர். இதனால் ஜெயக்குமாரின் வீட்டுக்கு அடிக்கடி பிரவீன் சென்று வந்துள்ளார். 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர்.
இதை ஜெயக்குமாரும், பூஜா தேவியும் கண்டித்தனர். மேலும் பிரவீனுடன் பேசக்கூடாது என்று அவர்கள் கூறியதோடு, செல்போனை பிடுங்கி வைத்தனர். இதனால் தந்தை ஜெயக்குமார், தாய் பூஜா தேவி ஆகியோர் மீது அவர் கோபம் கொண்டார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு ஜெயக்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகனுடன் புதுச்சேரிக்கு கிளம்பினார். இதனால் வீட்டில் ஜெயக்குமாரும், அவருடைய மகள் மட்டும் இருந்தனர். ஜெயக்குமாரின் மகள் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவர் தனது காதலன் பிரவீனிடம் உதவி கேட்டார். அவர் உதவி செய்வதாக கூறினார்.
தனது திட்டப்படி தூக்க மாத்திரைகள் கலந்த பாலை ஜெயக்குமாருக்கு அவருடைய மகள் கொடுத்தார். மயக்கம் வந்த நிலையில் அவர் வீட்டு படுக்கையறையில் படுத்து தூங்கினார். இதுபற்றி தனது காதலன் பிரவீனுக்கு தகவல் தெரிவித்து கொலையை அரங்கேற்ற வரும்படி கூறினார். அதன்படி பிரவீனும் ஜெயக்குமாரின் வீட்டுக்கு உடனடியாக வந்தார். அப்போது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் படுத்து தூங்கிய ஜெயக்குமாரை அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். அதன்பிறகு அவருடைய உடலை படுக்கை அறையில் இருந்து குளியல் அறைக்கு இழுத்து சென்றனர்.
பிறகு வீட்டு படுக்கை அறை உள்பட பல்வேறு இடங்களில் படிந்து இருந்த ரத்தகறையை சுத்தம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காலையில் குளியல் அறைக்கு ஜெயக்குமாரின் உடலை கொண்டு சென்றனர். அங்கு வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர். இந்த வேளையில் எதிர்பாராத விதமாக அவர்கள் 2 பேரின் கால்களிலும் தீப்பற்றியது. இதனால் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறி நாடகமாடியதும், தற்போது போலீசில் சிக்கிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ஜெயக்குமாரின் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Related Tags :
Next Story