விருதுநகர் தொலைதொடர்பு வட்டம் தூத்துக்குடியுடன் இணைப்பு; நிர்வாக பணிகள் பாதிக்கப்படும் நிலை
விருதுநகரில் பொது மேலாளர் தலைமையில் இயங்கி வந்த தொலை தொடர்பு வட்டம் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு விட்டதால் நிர்வாக பணிகளில் பாதிப்பு ஏற்படுவதோடு சேவை குறைபாடு உருவாகும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர்,
விருதுநகர் தொலை தொடர்பு துறை தொடக்க காலத்தில் கோட்ட என்ஜினீயர் தலைமையில் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் பி.எஸ்.என்.எல். நிறுவனமாக மாறிய பின்பு விருதுநகர் தொலை தொடர்பு வட்டம் பொது மேலாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. பொதுமேலாளர் தலைமையில் நிறுவனம் செயல்பட்டு வந்ததால் மாவட்டம் முழுவதும் தொலைதொடர்பு சேவையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. புதிய டெலிபோன் நிலையங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் செல்போன் கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன.
தற்போது பி.எஸ்.என்.எல். நிர்வாகம் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் விருதுநகரில் தனியாக செயல்பட்டு வந்த தொலைதொடர்பு வட்டம் தூத்துக்குடியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதேபோன்று நெல்லை தொலை தொடர்பு வட்டம் நாகர்கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக 2 வட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் தொலைதொடர்பு வட்டம் தூத்துக்குடி பொது மேலாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் நிலை இருந்து வருகிறது.
இதனால் இம்மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்து இங்குள்ள அதிகாரிகள் தூத்துக்குடிக்கு சென்றுதான் கலந்தாய்வு செய்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இதனால் நிர்வாக பணிகளில் பாதிப்பு ஏற்படுவதோடு சேவை குறைபாடும் ஏற்படும் நிலை உள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக இந்த இணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இங்குள்ள அதிகாரிகள் வாரத்தில் பலமுறை கலந்தாய்வு கூட்டங்களுக்காக தூத்துக்குடிக்கு சென்று வருவதால் நிர்வாக செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
நிதி நெருக்கடி காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறினாலும் நிர்வாக பணி பாதிப்பால் சேவை குறைபாடு ஏற்படும் நிலை உள்ளது.
ஏற்கனவே தனியார் தொலை தொடர்பு நிறுவன ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த இணைப்பு நடவடிக்கையால் மேலும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும்.
எனவே விருதுநகர் தொலை தொடர்பு வட்டம் ஏற்கனவே இருந்ததை போல தனி தொலை தொடர்பு வட்டமாக செயல்பட பி.எஸ்.என்.எல். நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதி எம்.பி.யும் இது குறித்து தொலை தொடர்பு அமைச்சகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Related Tags :
Next Story