கும்மிடிப்பூண்டி அருகே சுடுகாட்டை மீட்கக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த பூவலை கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என அந்த பகுதியில் உள்ள 28 சென்ட் சுடுகாட்டு நிலத்திற்கு சென்று வர 12 அடி அகலத்தில் ஏற்கனவே பாதை இருந்தது. தற்போது சுடுகாட்டையும், அதற்கு செல்லும் பாதையையும் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சுடுகாட்டையும், அதற்கான பாதையையும் மீட்டு தரும்படி கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இருளர் சமுதாய மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இருளர் இன மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாடு மற்றும் சுடுகாட்டு வழிப்பாதை தற்போது ஆக்கிரமிப்பில் இருந்து வருவதால் அவர்கள் மாற்று ஏற்பாடு ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சுடுகாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சுடுகாட்டையும், சுடுகாட்டு பாதையையும் மீட்டு தரக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடம் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கலபனா தத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 30-ந்தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எழுத்துபூர்வமாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தங்களது 4 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அருள் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடம் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கலபனா தத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 30-ந்தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எழுத்துபூர்வமாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தங்களது 4 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story