சென்னசமுத்திரம் பேரூராட்சியில் ஒப்பந்த காலம் முடிந்தும் போடப்படாத ரோடு; பொதுமக்கள் புகார்
சென்னசமுத்திரம் பேரூராட்சியில் ஒப்பந்த காலம் முடிந்தும் போடப்படாத ரோடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவுக்கு உள்பட்டது சென்னசமுத்திரம் பேரூராட்சி. இங்கு ஈரோடு-கரூர் ரோடு சோளக்காளி பாளையத்தில் இருந்து சிட்டப்புள்ளாம் பாளையம் வரை தார் ரோடு அமைக்க கடந்த பிப்ரவரி 12-ந் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.75 லட்சம் செலவில் இந்த ரோடு பணிகள் நடைபெறுவதாகவும், ஒப்பந்த காலம் ஆகஸ்டு 8-ந் தேதியுடன் முடிவடைவதாகவும் அப்போது கூறப்பட்டது.
இதுகுறித்து சோளக்காளிபாளையத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் 2019-2020, மதிப்பீட்டு தொகை ரூ.75 லட்சம், பணியின் பெயர் வார்டு எண் 4 ஈரோடு-கரூர் மெயின் ரோடு முதல் சிட்டப்புள்ளாம்பாளையம் முனியப்பன் கோவில்வரை தார்சாலை அமைத்தல் என்று பணி தொடங்கி, முடியும் நாள் குறிப்பிடப்பட்டது.
சாலைப்பணிகள் கடந்த 8-ந் தேதி முடிந்து தார்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அந்த பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சென்னசமுத்திரம் பேரூராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பணி எதுவும் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக சோளக்காளி பாளையத்தில் வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருந்த விவரங்களை பேரூராட்சி பணியாளர்கள் அழித்துவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர். எனவே கடந்த வாரத்தில் சாலையின் ஒருபகுதி மட்டும் தோண்டப்பட்டு ஜல்லி போடப்பட்டது. பின்னர் அங்கு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிட்டப்புள்ளாம்பாளையம் பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலைப்புதூரில் உள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிட்டப்புள்ளாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆர்.சிவக்குமார் என்பவர் கூறியதாவது:-
சோளக்காளி பாளையத்தில் இருந்து சிட்டப்புள்ளம்பாளையம், சம்மங்குட்டைபுதூர், வருத்தியாபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் போடப்பட்டது. பின்னர் பராமரிப்பு இன்றி முழுமையாக பழுது அடைந்தது. எனவே சாலை போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தோம்.
அதன்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் சாலை பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு வேலையும் நடைபெறாமல் நாட்களை கடத்தி வந்தனர். கடந்த 8-ந் தேதி பணி நிறைவடையும் என்று அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டதை வைத்து அதிகாரிகளிடம் புகார் கூறினோம்.
எங்கள் பிரச்சினையை தீர்க்க முடியாத அதிகாரிகள், பணியாளர்களை வைத்து அறிவிப்பு பலகை எழுதப்பட்டு இருந்த விவரங்களை அழித்து விட்டனர். எனவே பொதுமக்கள் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுத்தோம். இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடம் புகார் கூற இருப்பதாக அதிகாரிகளிடம் கூறினோம். அதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் பொக்லைன் எந்திரம் மற்றும் ரோடு ரோலர்கள் கொண்டுவந்து வேலை செய்தனர்.
சுமார் அரை கிலோ மீட்டர் அளவுக்கு ஒரு ரோட்டிலும், ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு இன்னொரு ரோட்டிலும் சாலையை பறித்து ஜல்லிபோட்டனர். பின்னர் யாரையும் காணவில்லை. இதுகுறித்து கேட்டபோது ஒப்பந்ததாரர் பணி செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எது உண்மை என்று தெரியவில்லை. எங்களுக்கு முறைப்படி சாலை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்- அமைச்சரிடமும் புகார் தெரிவிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story