விழுப்புரத்தில், பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பெண்கள் கைது


விழுப்புரத்தில், பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று காலை விழுப்புரம் காந்தி சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி பஸ்சில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் 3 பெண்கள் வைத்திருந்த பைகளில் 697 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட வேலாந்தல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் மனைவி சங்கீதா (வயது 32), திருக்கோவிலூர் அருகே சித்தாமூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி தேவகி (60), முருகன் மனைவி ரேவதி (52) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை பஸ்சில் கடத்தி வந்தபோது பிடிபட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story