தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
பதவி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ.க்கள். எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ் பாண்டியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 19 பேர் என மொத்தம் 21 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசிய போது கூறியதாவது:-
வளர்ச்சி
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து படிப்படியாக அனைத்து நிலையான கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் முறையாக நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் இயங்கும் பண்ணை பசுமை காய்கறி அங்காடி விற்பனையில் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தமிழகத்தில் சிறந்த வங்கி என பெயர் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இந்துமதி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அருள்சேசு, தேர்தல் அலுவலர் சந்திரா, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அந்தோணிபட்டுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story