அரக்கோணம் பகுதியில் கொலை செய்த பெண்களின் பிணத்துடன் உல்லாசமாக இருந்த ‘சைக்கோ’ வாலிபர் - பரபரப்பு வாக்குமூலம்


அரக்கோணம் பகுதியில் கொலை செய்த பெண்களின் பிணத்துடன் உல்லாசமாக இருந்த ‘சைக்கோ’ வாலிபர் - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

கொலை செய்த பெண்களின் பிணத்துடன் உல்லாசம் அனுபவித்த ‘சைக்கோ’ கொலையாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

அரக்கோணம், 

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூர், ராமசாமி நகரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 43), டெய்லர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரவு வீட்டில் அவருடைய தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் நிர்மலாவையும், அவரது தாயாரையும் தாக்கி உள்ளார். தாக்குதலில் மயங்கிய அவரது தாயை வீட்டில் உள்ளே தள்ளி கதவை பூட்டி விட்டார்.

பின்னர் நிர்மலா தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் குற்றவாளியை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் முத்துராமலிங்கம், அண்ணாதுரை, சப்- இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் சென்னை, ஆந்திரா, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் குற்றவாளி பிடிபடவில்லை.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் அருகே ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட நகரி பகுதியில் சரோஜா அம்மாள் (40) என்ற பெண்ணை மர்ம நபர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்று உள்ளார்.

இதுகுறித்து நகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரக்கோணம் அருகே வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் நகரி போலீசார் ஆனந்தனின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் தங்கநகைகள் இருந்தன.

போலீசார் நகைகளை பறிமுதல் செய்து விசாரித்தபோது ‘சைக்கோ’ போல் பெண்களை கொலை செய்து விட்டு பிணத்துடன் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

அரக்கோணம் அருகே கைனூர் பகுதியில் நிர்மலா என்ற பெண்ணை கொலை செய்து விட்டு அவரது பிணத்துடன் உல்லாசமாக இருந்தேன். பின்னர் அவருடைய வீட்டில் இருந்த நகைகளை திருடி வந்தேன். அதேபோல் நகரியில் சரோஜா அம்மாளையும் கொலை செய்து அவரிடம் உல்லாசமாக இருந்தேன்..

இதுகுறித்து ஆந்திர மாநில போலீசார் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசுப்பிரமணி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அரக்கோணம் போலீசார் ஆந்திரா சென்று ஆனந்தனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நிர்மலாவை அரக்கோணத்தில் நான்தான் கொலை செய்தேன் என்று அவர் தெரிவித்தார்.

நகரி கொலை வழக்கில் சிக்கிய அவரை நீதிமன்ற காவலுக்கு பின்னர் கோர்ட்டு அனுமதியோடு போலீஸ் காவலில் அரக்கோணத்திற்கு கொண்டு வந்து நிர்மலா கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்த இருப்பதாகவும், வேறு ஏதேனும் கொலை வழக்கில் வாலிபர் ஈடுபட்டு உள்ளாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக அரக்கோணம் போலீசார் தெரிவித்தனர்.

Next Story