மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் + "||" + Asking for drinking water The public Road Picketing

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு அவ்வைநகர் பகுதியில் கடந்த 3 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அவர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திருப்பத்தூர் - புதுப்பேட்டை மெயின்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அவினாசி அருகே கிராமசபை கூட்டம் நடத்த தாமதம்: பொதுமக்கள் சாலைமறியல்
அவினாசி அருகே உப்பிலிபாளையத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.
2. பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொது மக்கள் சாலை மறியல்
பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. குடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
குடிநீர் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. சென்னிமலை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.